பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு ஆண்மை நீக்கம்! 

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு ஆண்மை நீக்கம்! 

மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 600 வழக்குகள் இது தொடர்பாக அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனை தடுப்பதற்காக மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமானது அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதல் உடன் அமலுக்கு வர உள்ளது.

மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This