ரயில் மோதி சிறுவன் பலி!

ரயில் மோதி சிறுவன் பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் நேற்று ரயில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிய குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முள்ளிப்பொத்தானை, யூனிட் – 07 பகுதியைச் சேர்ந்த தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவனான நளீம் முஹம்மது சப்ரிட் (வயது 14) என்பவரே இவ்வாறு .உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This