மரதன் உலக சாதனை வீரர் உயிரிழப்பு!
ஆண்களுக்கான மரதன் உலக சாதனை வீரரான கென்யாவின் கெல்வின் கிப்டம் தமது 24 வது வயதில் உயிரிழந்தார்.
அவர் தமது பயிற்சியாளருடன், மகிழுந்து ஒன்றில் பயணித்த போது, இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் சிக்காகோவில் இடம்பெற்ற மரதன் போட்டியில் 26.1 மைல்கள் தூரத்தை இரண்டு மணித்தியாலங்களும் 35 நிமிடங்களிலும் நிறைவு செய்து உலக சாதனையை பதிவு செய்தார்.
அவரது இறப்புக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.