இன்றைய ராசிபலன் – 10.02.2024
பொதுப்பலன்: விளையாட்டு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ஆலோசனை கூட்டங்கள் நடத்த, கடன் தீர்க்க, ரத்தினங்களின் தரத்தை அறிய, பட்டா வாங்க நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து, எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகி, எண்ணங்கள் நிறைவேறும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேஷம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: தயக்கம், காரியத் தாமதம் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டக் கூடாது. மற்றவர்களின் ஆலோசனைகளை தவிர்ப்பது நல்லது.
கடகம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேலைபளு குறையும்.
சிம்மம்: வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் எற்பாடாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கன்னி: உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர். உறவினர், நண்பர்கள் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள்.
துலாம்: நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி, நெருக்கம் அதிகமாகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் இருந்த குழப்பம் விலகும்.
விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். குழப்பங்கள் விலகி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வாகனச் செலவு நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
தனுசு: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சினைகள் சீராகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. வீண் விவாதம் வேண்டாம்.
மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்கள். உறவினர்களால் அன்புத் தொல்லை உண்டு. தாயார், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். புதிய பொறுப்புகள் கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
மீனம்: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும்.