மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை வர்த்தகர்!

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை வர்த்தகர்!

76 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவில் வைத்து கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணிக்கக்கல் வர்த்தகர் மாலைதீவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தகர் மாலைதீவுக்கு தப்பிச் சென்று நான்கு மாதங்கள் தலைமறைவாகியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பேருவளை மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு சொந்தமான மாணிக்கக் கற்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த வர்த்தகர் அவற்றை எடுத்துச் சென்று மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த வர்த்தகர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This