கிளிநொச்சி பகுதியில் பதற்றம் ; 05 பல்கலை மாணவர்கள் கைது!

கிளிநொச்சி பகுதியில் பதற்றம் ; 05 பல்கலை மாணவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல், கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் சட்டங்களை இயற்றுதல், தீர்வு கிடைக்காமை,  தற்போது மக்களுக்கு தாங்க முடியாத பிரச்சனைகள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர், எஸ்.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவும் இந்த கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This