ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு!

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு!

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

90 மதிப்பெண்ணுடன் டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடம் பிடித்துள்ளது. 87 மதிப்பெண்ணுடன் பின்லாந்து 2-ம் இடமும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன.

நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கஜகஸ்தான், லெசோத்தோ, மாலைதீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

பாகிஸ்தான் 133-வது இடமும், இலங்கை 115-வது இடமும், சீனா 76-வது இடமும் பிடித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This