சுற்றுலா சேவைக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

சுற்றுலா சேவைக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவைக்கான போக்குரவத்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டணமானது 2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் நேற்று (29) குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும், ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபாய் வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000 இல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This