பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் 27 மனுக்கள்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் 27 மனுக்கள்!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கும், பொது வாக்கெடுப்பும் அவசியமென உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைய, இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோரால் எந்தவொரு நபரையும் உரிய காரணங்கள் இன்றி கைது செய்து தடுத்து வைக்க முடியும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This