நல்லிணக்கம், மனிதாபிமானம் பற்றி பேசுவதில் பயனில்லை!

நல்லிணக்கம், மனிதாபிமானம் பற்றி பேசுவதில் பயனில்லை!

வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலேயே கடற்றொழில் அமைச்சர் இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிப்பதற்கு இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

கடற்தாழிலாளர்களின் விடுவிப்பிற்கு வடக்கு கடற்தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில் வட மாகாணத்தின் பல்வேறு கடற்பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் கடற்றொழில் அமைச்சின் பரிந்துரைக்கமைய நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் கடற்றொழில் அமைச்சரின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னரும் இந்திய நிதியமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க எந்தவித சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் 20 இந்திய கடற்தொழிலாளர்கள் விடுக்கப்பட்டிருந்தனர்.

அதன்போது வடக்கிலுள்ள கடற்தொழிலளர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

எனவே பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய கடற்தொழலாளர்கள் விடுவிக்கப்படுவார்களேயானால், அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து இந்த கடற்தொழிலாளர்களை கைது செய்ய வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லிணக்க அடிப்படையில் கடற்தொழிலாளர்களை விடுவிப்பது தவறு என கருதவில்லை, எனினும் இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் தவறுகளில் ஈடுபடும் போது நல்லிணக்கம், மனிதாபிமானம் பற்றி பேசுவதில்லை பயனில்லை எனவும் இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This