இன்று முதல் கொழும்பில் CCTV நடைமுறை!

இன்று முதல் கொழும்பில் CCTV நடைமுறை!

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This