ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்!

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்!

மேற்கு ஈராக்கில் அல் அசாத் விமான தளம் உள்ளது. இங்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அல்-அசாத் விமான தளம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க இராணுவம் கூறும்போது, மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

ஆனால் சில ஏவுகணைகள் இராணுவ தளம் மீது விழுந்தது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

CATEGORIES
TAGS
Share This