மன்னாரில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்பு!

மன்னாரில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்பு!

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து நேற்று (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்கப்பட்ட தோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாடு கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன், தலை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த பகுதியில் உள்ள காணியை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மில்லி கிராம் நிறை கொண்ட 24 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

அண்மைய நாட்களாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் போதை மாத்திரைகள் விற்பனைக்காக மன்னாரில் உள்ள சில கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு துறையினரால் மீட்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This