இன்றைய ராசிபலன் – 16.01.2024

இன்றைய ராசிபலன் – 16.01.2024

மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

மேஷம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம், லாபம் உண்டு. பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

கடகம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக கவனம், நிதானம் அவசியம்.

சிம்மம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

கன்னி: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். வியாபார ரீதியாக சில பிரபலங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

துலாம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை சரியாகி, அன்யோன்யம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பண வரவு உண்டு.

தனுசு: சாதுர்யமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மனைவி வழியில் இருந்த மனஸ்தாபம் விலகும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.

மகரம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: ஒருவித அச்சம், கவலை இருக்கும். வேலை பளு இருந்தாலும், உற்சாகம் குறையாமல் பணியாற்று
வீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. திடீர் பயணம் வரும்.

மீனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

CATEGORIES
TAGS
Share This