கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; 25 கைதிகள் காயம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; 25 கைதிகள் காயம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (12) இடம்பெற்ற மோதல் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவி்துள்ளார்.

இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைக்கு சோமாவதி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This