நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம்!

நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம்!

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

“நம் நாட்டில் ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக, 2013 இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 குறைந்துள்ளது. வேறுவிதமாகக் கூறினால், 2013 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இது 25% குறைந்துள்ளது. பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை நெருங்குகிறது.” என்றார்.

இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம் என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒருபுறம் பிறப்புகள் குறைந்து இறப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. நமது மக்கள்தொகை எதிர்காலத்தில் குறையும் போக்கைக் காட்டுகிறது.” என மேலும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This