தஜிகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று (06) காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது.

இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS
Share This