இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய அவுஸ்திரேலியா!

இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய அவுஸ்திரேலியா!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது.

இதனால் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணி 117 ரேட்டிங் உடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.தென் ஆப்பிரிக்க அணி 4 ஆவது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

CATEGORIES
TAGS
Share This