பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட யாழ். சங்கிலியன் பூங்கா!

பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட யாழ். சங்கிலியன் பூங்கா!

யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் உள்ள சங்கிலியன் பூங்கா யாழ். மாநகர சபையினால் பொழுதுபோக்கு மையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்குறிய இடமாக நேற்று (01.01.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேற்படி பூங்காவின் நீண்ட கால அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தற்காலிக பொழுது போக்கு மையமாக பயன்படுத்த கூடியவாறு மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் படிப்படியாக இப் பூங்காவினை மேம்படுத்த உள்ளதாகவும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் குறித்த பொழுதுபோக்கு மையத்தினை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காலப்போக்கில் கட்டணங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் யாழ். மாநகரசபையினரால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

CATEGORIES
TAGS
Share This