மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்: திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்: திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

இந்தியாவின் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்அடுத்தவாரம் திகதி அறிவிக்கப்படும் இந்தியாவின் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.

தீபாவளி பண்டிகையின் பின்னர் நவம்பர் மாதம் 2 அல்லது 3 ஆவது வாரத்தில் வாக்குப்பதிவுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்டில் 2019 ஆம் ஆண்டு 05 கட்டங்களாக நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனால் ஜார்க்கண்டில் இந்த தடவை வாக்குப்பதிவை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நிறைவடைகிறது.

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி நிறைவடைகிறது.

இதனால் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
Share This