வாழ்நாள் சாதனையாளர் விருது: முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கி கௌரவிப்பு
சமுதாய மேம்பாடு, படைப்பாற்றல், புத்தாக்கம், சூழலமைப்பை வலுப்படுத்துவதிலுள்ள தலைமைத்துவ உறுதி மற்றும் விடாமுயற்சியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய எச்ஆர்டி விருதுகள் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருதானது, மனித வள மேம்பாட்டுக்காக அவர்களது பங்களிப்பு எந்தவிதத்தில் அமைந்துள்ளது என்பதை கருத்தில்கொண்டு இவ் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது விழாவுடன் சேர்த்து உலகளாவிய மாநாடொன்றும் நடைபெற இருக்கிறது.
இதில் கிட்டத்தட்ட 350 மனித வள மேம்பாட்டு நிபுணர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் பல நாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.
ஸ்டாலின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் பல இலட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்திருக்கிறார்கள். தொழில் வாய்ப்புக்களை அதிகரித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டை ட்ரில்லியன் பொருளாதாரமாக உருவாக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கொள்கை மகிழ்ச்சியளிக்கிறது.
கல்வி, மனிதவள மேம்பாடு இரண்டும்தான் வறுமையை ஒழிக்கும் என இக் குழு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
இதற்காகத்தான் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரிய எச்ஆர்டி விருதுகள் நிறுவனர் டத்தோ டாக்டர் பாலன் கூறியுள்ளார்.