கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி; நிவாரணம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி; நிவாரணம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டிய ப்ரீலாண்ட் அறிவித்துள்ளார்.

கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குடும்பம் ஒன்றின் தேறிய வருமானம் மற்றும் 19 வயதுக்கு கீழ் பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுத் தொகை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This