ஜனாதிபதிக்கு தகுதியானவர் கமலா ஹாரிஸ்: ஆபத்தானவர் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதிக்கு தகுதியான நபர் கமலா ஹாரிசே என்றும், அவர் தான் முக்கியமான தருணங்களில் சரியான முடிவு எடுப்பார் என்றும் டிரம்ப் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர் எனவும் முன்னாள் இராணுவ ஜெனரல்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகிய இருவரில் இந்த தேசத்தின் தலைமை பொறுப்பில் இருந்து பணியாற்றும் தகுதி கமலா ஹாரிஸ்க்கே உள்ளது. அவர் திறம்பட பணியாற்றுவார். மேலும் ரஷ்யா, உக்ரைன் போர், சீன பதட்டம் உள்ளிட்ட பிரச்சினையில் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சரியான முடிவை அவர் எடுத்துள்ளார்.
டிரம்ப் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர். இவரது ஆட்சியில் எடுத்த முடிவுகள் தோல்வியை தழுவின. இவர் எடுத்த பல்வேறு முடிவுகள் நாட்டிற்கு பின்னடைவை தந்தன. ஆப்கனில் படை குறைப்பில் அவர் எடுத்த முடிவுகள் தவறானது.
நமது இராணுவ வீரர்களுக்கு தீங்கிழைத்தார். டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு தகுதி அற்றவராகி விட்டார். இவ்வாறு இராணுவ முன்னாள் அதிகாரிகள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர்.