மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்: சீனாவில் கண்டுபிடிப்பு

மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்: சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் ‘வெட்லேண்ட் வைரஸ்’ (wetland virus) என அழைக்கப்படும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வைரஸ் முதன்முதலில் 2019 ஜூன் மாதம் ஜின்ஜோ நகரில் 61 வயதான நோயாளியிடம் அடையாளம் காணப்பட்டது.

அவர் மங்கோலியாவின் ஈரநிலங்களில் உண்ணி கடித்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் நோய்வாய்ப்பட்டார்.

தி நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நோயாளி காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தியினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெட்லேண்ட் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்றாலும், மனிதர்கள் மற்றும் விலங்குகள் இரண்டையும் பாதிக்கும் திறன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

வைரஸின் பரவல் மற்றும் சாத்தியமான தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

CATEGORIES
Share This