கொங்கோ சிறையில் வன்முறை: 129 கைதிகள் உயிரிழப்பு

கொங்கோ சிறையில் வன்முறை: 129 கைதிகள் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தின் நிலைமை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை எக்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சர் ஷபானி லுகூ தெரிவிக்கையில், சிறையின் நிர்வாகக் கட்டிடம், அதன் உணவுக் கிடங்குகள் மற்றும் ஒரு வைத்தியசாலையிலும் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறினார்.

வன்முறையில் சுமார் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எந்தக் கைதியும் தப்பிச் செல்லவில்லை, தப்பிக்க முயன்றவர்கள் உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் முன்னதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி வந்தது.

மக்காலா சிறைச்சாலை கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிகப்பெரியது மற்றும் 1,500 கைதிகளை அடைக்கக் நிர்மாணிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, தற்போது 14,000 முதல் 15,000 கைதிகள் அங்கு உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் விசாரணைக்காக காத்திருக்கும் நபர்கள் என்று அங்குள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டுகிறது.

CATEGORIES
Share This