ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான ஹெலிகொப்டர்: 17 பேர் சடலங்களாக மீட்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 22 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திலிருந்து 19 சுற்றுலா பயணிகள் மற்றும் 03 பணியாளர்களுடன் நேற்று சனிக்கிழமை புறப்பட்ட ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு இயந்திரங்கள் கொண்ட ஹெலிகொப்டரான எம்ஐ-8 ரஷ்யாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக ஓகஸ்ட் 12 ஆம் திகதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகொப்டர் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.
கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.
இது மொஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கி.மீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.