பாதை புனரமைக்கப்படாமையினால் காட்மோர் மக்கள் அவதி

பாதை புனரமைக்கப்படாமையினால் காட்மோர் மக்கள் அவதி

மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்ட காட்மோர் பிரதான பாதையை சீர் செய்து தருமாறு வாகன சாரதிகள் மற்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பாதை மஸ்கெலிய நகரில் இருந்து சுமார் பன்னிரெண்டு கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும்.

கடந்த 2018 ம் ஆண்டு குறித்த பாதை மல்லியப்பு சந்தியில் இருந்து காட்மோர் வரை ஆறு கிலோ மீட்டர் தூரம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மொக்கா பிரதான காரியாலயத்திற்கு அருகில் இருந்து காட்மோர் சந்திவரை ஒரு கிலோமீட்டர் தூரம் சரி செய்யப்படாத நிலையில் தற்போது மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

குறித்த பாதை செப்பனிடப்படாமையால் தமது அவசர தேவைகளை செய்து கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கி வருவதாக இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற நீர் வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் உல்லாச பயணிகள் தமது சொகுசு வாகனங்களை இடையில் நிறுத்தி வைத்துவிட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்ற போதும் தமக்கான உரிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்று இந்த பகுதியில் வாழும் மக்கள், பாடசாலை பிள்ளைகள், வாகன சாரதிகள் முதலியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

செய்தி. ஞானராஜ்

CATEGORIES
Share This