பாடசாலை முதலாம் தவணை விடுமுறைக்கான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES பிரதான செய்தி