சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னைக்கு சென்றிருந்த வேளை, திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இன்று(02) அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு ஒன்றின் நிமித்தமாக நேற்று முன்தினம் கொழும்புக்கு சென்ற பின்னர், வழக்கு முடிவடைந்து அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதிப்படைந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This