பிரபல உலக தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!

பிரபல உலக தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!

உலகளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 5ஆம் திகதி வரை ஒரு வார காலம் நடத்தியது.

இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 78 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 65 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2ஆம் இடம் பிடித்தார்.

அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவிர் மிலே 63 சதவீதம் பேர் 3ஆம் இடத்திலும், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீதத்துடன் 4ஆம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீதத்துடன் 5ஆம் இடத்திலும் உள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி டி சில்வா 6ஆம் இடத்திலும், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 7ஆம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 8ஆம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 9ஆம் இடத்திலும், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 10ஆம் இடத்திலும் உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This