வவுனியா மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 67 யானைகள் பலி!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் 67 யானைகள் பலி!

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அண்மித்த பகுதிகளிலில் அனுமதியற்ற சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியும், வெங்காய வெடி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியும் (சட்டவிரோத துப்பாக்கி) புகையிரத விபத்துக்களாலும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 05 வயது தொடக்கம் 40 வயதுடைய யானைகளே இவ்வாறு பலியாகியுள்ளன.

இதேவேளை இவ்வருடம் இதுவரை 03 யானைகள் பலியானதுடன், கடந்த வருடம் 17 யானைகள் வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This