யாழ்.தொண்டமானாறில் தவளை ஐஸ்கிறீம்!

யாழ்.தொண்டமானாறில் தவளை ஐஸ்கிறீம்!

யாழ். தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14) ஐஸ்கிரீம் குடிக்க சென்றவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த குளிர்பான விற்பனை நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This