இன்றைய ராசிபலன் – 05.02.2024

இன்றைய ராசிபலன் – 05.02.2024

பொதுப்பலன்: பாகப் பிரிவினை பேச, ஊழியர் ஒப்பந்தம் புதுப்பிக்க, கடன் தீர்க்க, புதிய வழக்குகள் தொடர, நோயுற்றோர் குளிக்க, வீடு, மனை, வாகனம் விற்க நல்ல நாள். வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் பன்னீர் அபிஷேகம், வில்வ அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், தடைகள் விலகி, விரும்பியது அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: உங்கள் பலம், பலவீனம் எது என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. கணவன் – மனைவிக்குள் சிறு சிறு மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

ரிஷபம்: எக்காரியத்திலும் கவனம் தேவை. செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மிதுனம்: இதமாக, இங்கிதமாக பேசி, அனைவரையும் கவர்வீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

கடகம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களுக்கு நன்கொடை தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்: அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கன்னி: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பணியில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும்.

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். தாய் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனியுங்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

மகரம்: கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்: திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய உத்திகளை கையாள்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல்நலம் சீராகும்.

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள், உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

CATEGORIES
TAGS
Share This