இலங்கையின் மீன்பிடி படகொன்று கடற்கொள்ளையரால் கடத்தல்!

இலங்கையின் மீன்பிடி படகொன்று கடற்கொள்ளையரால் கடத்தல்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் வைத்து  குறித்த படகு கடற்தொழிலாளர்களுடன் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 06 கடற்தொழிலாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட கடற்தொழிலாளர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This