உச்சம் தொடும் மரக்கறி விலைகள்!

உச்சம் தொடும் மரக்கறி விலைகள்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும் மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (27) காலை வெளியிட்டுள்ள மரக்கறிகள் கொள்வனவு மற்றும், விற்பணை விலை பட்டியலில் இந்த விலை உயர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிவப்பு கோவா 3,700 ரூபாய், புரக்கோலின் 4,000 ரூபாய், பெஸில் இலை 3,000 ரூபாய், ஐஸ்பேர்க் 2,600 ரூபாய் என மொத்த விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியாவில் இருந்து வெளியிட சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பணை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கோவா 520 ரூபாய்,
கரட் 1400 ரூபாய்,
லீக்ஸ் 470 ரூபாய்,
ராபு 170 ரூபாய்,
இலை வெட்டா பீட் 420 ரூபாய்,
இலை வெட்டிய பீட் 520 ரூபாய்,
உருளை கிழங்கு 320 ரூபாய்,
சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபாய்,
நோக்கோல் 370 ரூபாய் என மொத்த விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This