டொனால்டு டிராம்புக்கு முதல் வெற்றி!

டொனால்டு டிராம்புக்கு முதல் வெற்றி!

அமெரிக்க தேர்தலுக்கான நாள் நெறுங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.

டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்து நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

இது அவருக்குகான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This