மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி!

மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்பதாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராஙகனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This