

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்கிறார் செந்தில் தொண்டமான்!
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானை நியமிக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
எனினும், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்போது ஆளுநர் பதவி வகிப்பவர்கள் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார்கள் என்றும் தெரியவருகின்றது.
CATEGORIES செய்திகள்