புதிய விலையில் கொத்து மற்றும் உணவுப்பொதி

புதிய விலையில் கொத்து மற்றும் உணவுப்பொதி

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட் ரைஸ், மதிய உணவுப்பொதி மற்றும் கறிகளும் கொத்தும் 100 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் பால் டீயின் விலை 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதோடு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு முட்டைக்கு 35 ரூபாய் என்ற விலையில் பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படும் வரை மற்ற பொருட்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This