தமிழ் அரசியல் கைதியின் சகோதரி காலமானார்!

தமிழ் அரசியல் கைதியின் சகோதரி காலமானார்!

கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா நவரத்தினம் என்பவரின் சகோதரி, இரத்தினம் ராசலெட்சுமி, (04) காலமானார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் காலமான அம்மையாரின் இறுதிக் கிரியைகள், பளையில் இருக்கும் அன்னாரின் இல்லத்தில் நடைபெறுகிறது.

20 வருட கடூழிய சிறை தண்டணை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக சிறை அனுபவித்துவருகின்ற முதியவரான செ.நவரத்தினம், சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தனது மூத்த சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்.

அதற்கான முன்னாயத்தப் பணிகளை ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
Share This