

இந்தியாவில் புதிதாக 3,038 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 3,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் 3,824 ஆக உயர்திருந்தது. நேற்று 3,641 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று பாதிப்பு சரிந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 964, இமாச்சலபிரதேசத்தில் 318, டெல்லியில் 293, மகாராஷ்டிராவில் 248, குஜராத்தில் 231, கர்நாடகாவில் 175, தமிழ்நாட்டில் 186, அரியானாவில் 152 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,069 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 77 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 21,179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 960 அதிகமாகும்.