

சிக்கிமில் திடீர் பனிச்சரிவு – 6 பேர் பலி!
சிக்கிம் மாநிலத்தின் நாதுலா என்ற பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 22 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பனிச்சரிவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
CATEGORIES இந்தியா