பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கிடையே, பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்தார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This