

டுவிட்டரின் இலட்சனை மாற்றம்!
டுவிட்டரின் இலட்சனையை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். ஏற்கனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்த நீலநிற குருவிக்கு பதில் டாகி சின்னம் தற்போது இலட்சனையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் டுவிட்டர் இலட்சனையாக வைக்கப்பட்டுள்ளது. டாகி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிட்காயின் போன்ற பிற கிரிப்டோகரன்சிகளை கேலி செய்யும் வகையில் 2013ஆம் ஆண்டு டாகி காயினுக்கு ஷிபா இனுவின் நாய் படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் கணக்கில் ஷிபா இனுவின் நாய் படத்தை வெளியிட்டு டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.