நெதர்லாந்தில் ரயில்கள் மோதி விபத்து – பல பயணிகள் காயம்

நெதர்லாந்தில் ரயில்கள் மோதி விபத்து – பல பயணிகள் காயம்

நெதர்லாந்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ரயில்கள் தீப்பற்றிக்கொண்டதில் பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.

குறைந்தது 50 பேர் பயணம் செய்த ரயிலின் முதல் வண்டி தடம்புரண்டது. அதன் கடைசி வண்டி தீப்பற்றிக்கொண்டது.

ஹேகிற்கும் (The Hague) ஆம்ஸ்டர்டாமிற்கும் (Amsterdam) இடையே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சம்பவம் ஏற்பட்டது.

காயமடைந்த பலருக்குச் சம்பவ இடத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

மேலும் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This