எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.

CATEGORIES
Share This