சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம் !

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம் !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்தை பொறுத்தமட்டில் இன்று (04) மாத்திரம் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு, வாய்மொழி கேள்விக்கு பதில் வழங்கப்பட்ட பின்னர், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் மீது விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்பின், மாலை 5.30 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This