ரயிலில் தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு!

ரயிலில் தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு!

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில், சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணி ஷஜிஷா என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், தீ வைத்த நபர் மீது கொலை முயற்சி, மரணத்தை உண்டாக்கும் வகையிலான பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோழிக்கோடு ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மர்ம நபரின் செல்போனில் இருந்து கடைசியாக மார்ச் 30ம் திகதி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் பார்த்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சி அடிப்படையில் தீ வைத்த நபரின் மாதிரி உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This