அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டும்: வஜிர

அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலக வேண்டும்: வஜிர

அரச நிறுவனங்களின் பராமரிப்புக்காக அரசாங்கம் பணம் செலவழிப்பதை விட்டுவிட்டு அதில் பெரும்பாலான பணத்தை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய வளங்களை விற்று உண்பதாக சில தொழிற்சங்கங்கள் கூறினாலும் அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும் என்பதே தாம் கருத்தாகும் என அவர் கூறுகிறார்.

2026 வரையிலான குறுகிய கால வேலைத்திட்டங்கள் மற்றும் 2032 வரையான நீண்ட கால வேலைத்திட்டங்களின் கீழ் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவிலும் உலகிலும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This