உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி!

உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி!

உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடனான போரின் போது ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை மோசமாக கையாண்டதாலும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டதாலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய வீரர்கள் அதிகப்படியான மது அருந்தியதாலும் உயிரிழப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர வீதி விபத்துகள், தாழ் வெப்ப நிலை போன்றவைகளாலும் உக்ரைன் வீரர்களின் தாக்குதலாலும் பலர் உயிரிழந் திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தனது இராணுவ வீரர்களின் இறப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்தே சரியான புள்ளிவிவர கணக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This